தருமபுரி மாவட்டப் படைப்பாளர் பதிப்பாளர் சங்கம் செயற்குழு கூட்டம்
தருமபுரி மாவட்ட படைப்பாளர் பதிப்பாளர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம், 14.9.2019 சனிக்கிழமை மாலை தருமபுரி முத்து இல்லத்தில் நடைபெற்றது. இதில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. உறுப்பினர் சேர்க்கை விரைந்து முடிப்பது. 2. உறுப்பினர் ஆண்டு சந்தா ரூ.500 என்று முடிவு செய்யப்பட்டது. 3. ஆன்லைன் படிவம் மூலம் உறுப்பினர் விவரங்கள் பெறுவது. (இதற்கான லிங்க், வாட்ஸ் ஆப் குழுவில் கொடுக்கப்படும்.) 4. சங்கத்தைப் பதிவு செய்வதற்கான நடைமுறைகளை தலைவரும் பொருளாளரும் மேற்கொள்வது. 4. 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை கவிஞர் ஜெயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது. சங்க உறுப்பினர்கள் சங்க நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்.