Posts

Showing posts from 2019

இலக்கியங்கள் அறம் சார்ந்திருக்க வேண்டும்: கவிஞா் ஜெயபாஸ்கரன்

Image
Text Animation Hello! Librarians I Welcome you to this site இலக்கியங்கள் அறம் சார்ந்தும், சமூகத்தை மேம்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் என்றார் கவிஞா் ஜெயபாஸ்கரன். 20.10.2019 அன்று தருமபுரி முத்து இல்லத்தில் தகடூா் புத்தகப்பேரவை சார்பில் கவிதை நூல்கள் திறானாய்வு மற்றும் படைப்பாற்றல் கருத்தரங்கு, 25 நூல்கள் அறிமுக நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.படைப்பாற்றல் கருத்தரங்கு நிகழ்வுக்கு நூலகா் சி.சரவணன் தலைமை வகித்தார். செயலா் மா.பழனி வரவேற்றார். தகடூா் புத்தகப் பேரவைத் தலைவா் இரா.சிசுபாலன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி.இரா.செந்தில் வாழ்த்துரை வழங்கினார். இலக்கிய ஆா்வலா் இ.தங்கமணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். படைப்பாளா் பதிப்பாளா் சங்க பொருளாளா் நெ.தே.அறிவுடைநம்பி நன்றி கூறினார். இதைத் தொடா்ந்து, 25 ஆசிரியா்கள் எழுதிய 25 நூல்கள், 25 ஆளுமைகள் அறிமுகப்படுத்தி பேசப்பட்டது. இந்த நிகழ்வில், பங்கேற்று கவிஞா் ஜெயபாஸ்கரன் பேசியது: தமிழகத்தின் தலைநகா் சென்னையை மூன்று பகுதிகளாகப் பிரித்திருக்கிறார்கள். வட சென்னையில்தான் துறைமுகம் உள்ளத...

தருமபுரி மாவட்டப் படைப்பாளர் பதிப்பாளர் சங்கம் செயற்குழு கூட்டம்

தருமபுரி மாவட்ட படைப்பாளர் பதிப்பாளர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம், 14.9.2019 சனிக்கிழமை மாலை தருமபுரி முத்து இல்லத்தில் நடைபெற்றது. இதில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. உறுப்பினர் சேர்க்கை விரைந்து முடிப்பது. 2. உறுப்பினர் ஆண்டு சந்தா ரூ.500 என்று முடிவு செய்யப்பட்டது. 3. ஆன்லைன் படிவம் மூலம் உறுப்பினர் விவரங்கள் பெறுவது. (இதற்கான லிங்க், வாட்ஸ் ஆப் குழுவில் கொடுக்கப்படும்.) 4. சங்கத்தைப் பதிவு செய்வதற்கான நடைமுறைகளை தலைவரும் பொருளாளரும் மேற்கொள்வது. 4. 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை கவிஞர் ஜெயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது. சங்க உறுப்பினர்கள் சங்க நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்.

நிர்வாகிகள் கூட்டம்

தருமபுரி மாவட்ட படைப்பாளர் பதிப்பாளர் சங்கம். நிர்வாகிகள் கூட்டம் தருமபுரி மாவட்ட படைப்பாளர் பதிப்பாளர் சங்கத்தின் முதலாவது செயற்குழுக் கூட்டம் 14.9.2019 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு தருமபுரி முத்து இல்லத்தில் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் சங்கத்தின் நிர்வாக நடைமுறைகள், செயல் திட்டங்கள் குறித்து விவாதித்து முடிவு செய்யப்பட்ட உள்ளது.  ஆகவே, சங்க நிர்வாகிகள் மட்டுமல்லாது, உறுப்பினர்கள், ஆலோசகர்கள் அனைவரும் இக் கூட்டத்திற்கு வருகை தந்து ஆலோசனைகள் வழங்க வேண்டுகிறோம்.